படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !

பனாமா கொடியுடன் பயணித்த சரக்குக் கப்பலொன்று சிங்கப்பூர் நீரிணையில் மீன்பிடிப் படகொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கப்பல் மோதியதில் மீன்பிடிப் படகிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனத் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.