2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்த வட கொரியா!

வட கொரியா தனது 2வது அதிநவீன போர்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது.

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து முத்தரப்பு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் தனது மகளுடன் வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறித்த ‘காங் கான்’ போர்க்கப்பலை, நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இந்த ‘காங் கான்’ போர்க்கப்பல், அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட 5,000 டன் எடையுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை கூட்டாக எதிா்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையாக, ‘ஃப்ரீடம் எட்ஜ்’ எனும் 5 நாள்கள் முத்தரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியைத் தென்கொரியாவின் ஜெஜு தீவுப் பகுதியில் அமரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் திங்கள்கிழமை ஆரம்பித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *