போயஸ் கார்டனில் ரஜினிகாந்துடன் புதிய சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக இணைய நடிகர் ரஜினிகாந்த் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, சங்க நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சங்கத்தில் புதிய உறுப்பினராக இணையச் சம்மதம் தெரிவித்ததுடன், புதிய நிர்வாகிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கியுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *