கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்பு

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கார்க் தீவு அருகே பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானிய தனியார் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *