துருக்கி அருகே இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்து – 10 மாலுமிகள் மாயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் சிலிவ்ரி மாவட்டக் கடற்பகுதியில் இன்று அதிகாலை இரு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 10 மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.

கோகோவெலியில் இருந்து அலியாகா நோக்கிச் சென்ற ‘அல்சு’ என்ற கப்பலும், இஸ்கெண்டருன் துறைமுகத்திலிருந்து கராடெனிஸ் எரேக்லி நோக்கிச் சென்ற ‘துக்பெர்க் இமாமோக்ளு’ என்ற கப்பலும் அதிகாலை 3 மணியளவில் மோதியதாக இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோதலில் ‘அல்சு’ கப்பலுக்கு சிறியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ‘துக்பெர்க் இமாமோக்ளு’ கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. அதில் இருந்த 10 மாலுமிகளே தற்போது காணாமல் போயுள்ளனர்.

கடலோர பாதுகாப்புப் படையினரின் கப்பல்கள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் காணாமல் போன மாலுமிகளைத் தேடும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *