ஜெர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள ரோசென்ஹீம் (Rosenheim) இரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் 31 வயது பிரிட்டிஷ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு ரோசென்ஹீம் இரயில் நிலையத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. படுகாயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பவேரிய காவல்துறை (Bavarian Police) தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், 27 வயது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடப்பதற்கு சற்று முன்பு இரயில் நிலையத்தில் ஏதேனும் வாக்குவாதம் அல்லது மோதல்கள் நடைபெற்றதைக் கண்டவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Leave a Reply