சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தின் லோங்சாங் நகரில், 5.1 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் ஆழத்தில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று, சீனாவின் நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக, நோபளத்தில் நிலவி வரும் வெள்ளப் பாதிப்புகளும், பேரிடர் அபாயங்களும் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக திபெத் எல்லை பகுதியில் உள்ள அணையில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறி, புதிய வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மீட்பு பணிகள் தாமதமாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *