வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது!

வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர்  மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.