யுக்ரைன் போராட்டத்தை நாசி ஜெர்மனிக்கு எதிரான போருடன் ஒப்பிட்ட பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம்!

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக, யுக்ரைன் முன்னெடுத்து வரும் போராட்டத்தை, இரண்டாம் உலகப் போரின்போது நாசி ஜெர்மனிக்கு எதிராக பிரித்தானியா மேற்கொண்ட போராட்டத்துடன் பிரித்தானிய பிரதமர் அண்டி பர்ன்ஹாம் ஒப்பிட்டுள்ளார்.

யுக்ரைனின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு பிரித்தானியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

யுக்ரைனின் 35ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் அண்டி பர்ன்ஹாம் இன்று கியேவுக்கு சென்றுள்ளார்.

அங்கு யுக்ரைன்,ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துள்ளார்.

கியேவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய அண்டி பர்ன்ஹாம், 20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுதந்திரத்தின் தீபத்தை பிரித்தானியா பாதுகாத்ததாகவும், 21ஆம் நூற்றாண்டில் அந்தப் பொறுப்பை யுக்ரைன்; ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும், யுக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் ஐரோப்பாவின் பாதுகாவலாக செயற்படுவதாகவும், ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அது முக்கிய பங்காற்றுவதாகவும் அண்டி பர்ன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *