“இவர்தான் மருத்துவர்!” – மணக்கோலத்தில் கேரள மணமகளின் மனிதம்!

கேரள மாநிலத்தில், தனது திருமணச் சடங்குகளுக்கு மத்தியிலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்துக்காப்பாற்றிய மணமகளான இளம் பெண் மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருமண மண்டபத்தில் உணவளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண் ஊழியர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில் ஒருவருக்கு மூக்கில் இரத்தக்கசிவும், மற்றொருவருக்கு மயக்கமும் ஏற்பட்டது.

மணமகள் ஒரு மருத்துவர் என்பதை அறிந்த உறவினர்கள் அவரை உதவிக்கு அழைத்தனர். மணக்கோலத்தில் இருந்தபோதிலும், சடங்குகளைச் சற்று நேரம் நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட இருவருக்கும் அவர் உடனடியாக முறையான முதலுதவி சிகிச்சையளித்தார்.

மருத்துவப் பராமரிப்பைத் தொடர்ந்து இரு ஊழியர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ஒரு மருத்துவராக என் கடமையை மட்டுமே செய்தேன். அனைவரும் முதலுதவி குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருப்பது அவசியம்” என குறித்த மருத்துவர் எளிமையுடன் தெரிவித்துள்ளார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *