அமெரிக்காவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரது மகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டோனா என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தனது மகள் கேமி கம்மின்ஸ் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்க வேண்டும் என்பது டோனாவின் கடைசி ஆசையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, டோனாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மருத்துவமனை நிர்வாகம் முன்வந்து ICU-விலேயே திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துள்ளது.
இதன்படி, கேமி கம்மின்ஸ் தனது காதலரான சாண்டியை மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
திருமணம் இடம்பெற்று சில மணிநேரங்களிலேயே கேமியின் தாய் டோனா உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றிய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது
Leave a Reply