மெட்டா நிறுவனத்துக்கு 567 மில்லியன் டாலர் அபராதம்: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சரி செய்வதற்கு 567மில்லியன் டாலர் வழங்கக்கோரி மெட்டா நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை மூடி மறைத்தது தொடர்பாகவும் நிறுவனத்துக்கு எதிராக நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மெட்டா நிறுவனம் தோல்வியடைந்த நிலையில் முதல் கட்டமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் 375மில்லியன் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிமன்றம் மெட்டா நிறுவனத்தின தளங்களால் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சரிசெய்வதற்காக 567மில்லியன் டாலர்களை வழங்குமாறு உத்தரவிட்டது.

நீதிபதி பிரைய் பீட்ஷைட் கூறுகையில் இந்த தொகையில் பெரும்பகுதியான 420மில்லியன் டாலர்கள் இளைஞர்களுக்கான சிகிச்சை சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனை சேவைகள் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படும் பிற செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்று உத்தரவிட்டார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *