உலகின் முதல் தரவரிசை ஈட்டி எறிதல் வீரராக ரூமேஷ் தரங்கா

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ரூமேஷ் தரங்கா, ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் உலகின் முதல் தரவரிசை வீரராக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்ற அவர், 1,354 புள்ளிகளுடன் உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் ரூமேஷ் தரங்கா பெற்றுள்ளார்.

இந்தச் சாதனை, இலங்கை விளையாட்டுத் துறைக்கும், குறிப்பாக தடகள வரலாற்றிற்கும் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *