கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்

கனடாவின் ஆல்பர்ட்டா  மாகாணம் ஆன்லைன் சூதாட்ட தளங்களை முறைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாயைக் கொண்டு சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள், கட்டுப்பாடற்ற ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் வழிவகை செய்கிறது.

சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவர் தன்னைத் தடுத்துக் கொள்ள விரும்பினால், ஒரே ஒரு கோரிக்கையின் மூலம் அனைத்து ஆன்லைன் தளங்கள் மற்றும் நேரடி சூதாட்ட விடுதிகளில் இருந்து அவரைத் தன்னிச்சையாகத் தடை செய்ய புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டப் பயனர்கள் தங்களின் கணக்குகளில் பந்தயம் கட்டும் பண வரம்பு  மற்றும் நேர வரம்புகளை  தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளும் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழிலும் சார்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்கள் மற்றும் சூதாட்டத்தைக் கைவிட முயல்பவர்களைக் குறிவைத்து விளம்பரம் செய்யக் கூடாது.

இதேவேளை, ஆல்பர்ட்டாவில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தில் 70% பகுதி சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற வெளிநாட்டு தளங்களிலேயே நடைபெற்று வந்தது.

புதிய சட்டப்பூர்வ சந்தை மூலம் முதல் ஆண்டில் சுமார் 76 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும், முதல் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டொலரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு, சூதாட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், மருத்துவ மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *