கனடாவில் பிரபல சாக்லேட் நிறுவனமான கேட்பரியின் ‘டெய்ரி மில்க் ஓரியோ’ (Dairy Milk Oreo) சாக்லேட் பார்கள் நாடு தழுவிய அளவில் சந்தையிலிருந்து அவசரமாக மீளப்பெறப்படுகின்றன.
இந்த சாக்லேட் தயாரிப்பில் ‘பிஸ்தா’ பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பது அதன் லேபிளில் குறிப்பிடப்படவில்லை. பிஸ்தா அல்லது மரக் கொட்டைகள் (Tree Nuts) ஒவ்வாமை (Allergy) உள்ளவர்களுக்கு இது கடுமையான அல்லது உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாக்லேட்டைச் சாப்பிட்டதால் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குறிப்பிட்ட சாக்லேட்டுகள் கடைகளில் இருந்து முழுமையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், இது தொடர்பான விரிவான உணவுப் பாதுகாப்பு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து பிற தயாரிப்புகளும் திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a Reply