கனடாவில் காணாமல் போன சிறுவர்கள்: தேடுதல் பணி தீவிரம்

கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில்  நீரில் மூழ்கி மாயமான இரு சிறுவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாயமான சிறுவர்கள் இருவரும் வின்னிபெக்கைச் சேர்ந்த சகோதரர்களான ஆரோன் அவ் ராமிரெஸ் (13 வயது) மற்றும் மெக்சிமோ அவ் ராமிரெஸ் (10 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Whiteshell Provincial Park-இல் உள்ள ஸ்டர்ஜன் பால்ஸ்  பகுதியில் உள்ள பாறைகளில் இந்த சகோதரர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது 10 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக வழுக்கி தண்ணீரில் விழுந்துள்ளார். அவனைக் காப்பாற்ற 13 வயது அண்ணன் முயன்றபோது, இருவரும் அதிவேகமாக பாய்ந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

கனடிய அரச காவல்துறை, தண்ணீருக்கு அடியில் தேடும் மீட்புக் குழு  மற்றும்  Hutterian Emergency Aquatic Response Team (HEART) ஆகிய அமைப்புகள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இப்பகுதியில் நீரோட்டம் மிகவும் உக்கிரமாகவும், கணிக்க முடியாத வேகத்திலும் பாய்வதால் மீட்புக் குழுவினர் படகுகளைக் கையாள்வதிலும், தண்ணீருக்குள் தேடுவதிலும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.