கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருப்பது தொடர்பில் கட்சி தீவிரமாக ஆராயும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு எதிரான வழக்கினை எதிர்த்து கட்சி போராடும் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (22.08.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது அவரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
Leave a Reply