யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , மாங்குளம் பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்த நிலையில் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு , சாரதி , நடத்துனர் உள்ளிட்டோர் திருத்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளை வீதியில் வேகமாக பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியில் நின்றிருந்த பேருந்தின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியது.
அதன் போது பேருந்தில் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த சாரதி, நடத்துனர் உள்ளிட்ட ஐவர் கடும்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சாரதி உள்ளிட்ட மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நடத்துனரும் , மற்றைய நபரும் மேலதிக சிகிச்சைக்காக , கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply