சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு . பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்ற விசாரணைகளை அடுத்து , சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.