யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நான் யாழ்ப்பாணத்தில் ஒரு மைதானத்தில் இளைஞர்களுடன் கதைத்த ஒரு விடயத்தைச் சிலர் சர்ச்சையாக்கியுள்ளனர். அதனை வைத்து எனக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லாட்சி காலத்தில் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. அதன் நினைவில்தான் மைதானம் தொடர்பாக இளைஞர்களிடம் கேட்டேன். ஆனால், மண்டைதீவு என நினைவு வரவில்லை. அதானல் யாழ்ப்பாணத்தில் மைதானம் இல்லையா என கேட்டேன்.
தற்போது மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இருக்கின்றோம். ஆகவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதற்கட்டதாக இந்த மைதானத்தை அமைப்போம் என தெரிவித்தார்.
Leave a Reply