யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரு தொழிலாளிகளை காணவில்லை என குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.
அனலைதீவு பகுதியை சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ மற்றும் நாகலிங்கம் விஜயகுமார் ஆகிய இருவரும் கடந்த 10ஆம் திகதி மாலை படகொன்றில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையில் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களையும் ஊரவர்கள் கடலில் தேடி வருவதுடன் , கடற்படையினரிடம் முறையிட்டுள்ள நிலையில் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply