யாழில். போதைக்கு அடிமையான மகனை மீட்டு தருமாறு தாய் பொலிஸாரிடம் முறையீடு!

போதைக்கு அடிமையான மகனை , போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவர் , தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் கோரியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.