கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்வி !

யாழ்ப்பாணம் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி இன்றைய தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இன்றைய வேள்வியில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டன.

வேள்வியை முன்னிட்டு, நேற்றைய தினம்வெள்ளிக்கிழமை இரவு, வேள்வி ஆடுகளை வளர்த்தவர்கள் அவற்றை பொதுமக்களுக்கு காட்சி படுத்தி , அதிகாலை வேளை ஆலயத்திற்கு ஆடுகளை கொண்டு சென்று ,  பொங்கல் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன.

வெளிநபர்கள் ஆடுகள் பலி கொடுக்கப்படுவதை பார்க்க முடியாதவாறு ஆலய வாயிலில் பாதுகாப்பான கூடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆடுகளும் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டன.