யாழில். கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க முயற்சி – மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணி நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பதற்கான நில அளவை பணிகள் மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 04 பரப்பு தனியார் காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது,

அதன் ஒரு கட்டமாக இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த காணியினை நில அளவை செய்வதற்காக நில அளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் காணிக்கு வருகை தந்த போது , அங்கு கூடியிருந்த மக்களின் எதிர்ப்பினால் அவர்கள் காணி அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாது திரும்பி சென்றனர்.