பாதணிகளில் கார்த்திகை பூ – தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே  கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும் , அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார்.