யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
பாடசாலைகள் , ஆலயங்கள் , தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அருகில் குறித்த மது விற்பனை நிலையம் காணப்படுவதால் , பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் ஊர்காவற்துறை பிரதேசத்தில் அதிகரித்துள்ளது. எனவே தீவக மக்களின் நலன் கருதி குறித்த மது விற்பனை நிலையத்தை அகற்ற கோரி இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர்.
அதேவேளை குறித்த மது விற்பனை நிலையத்தில் , இரவு வேளைகளில் நேரம் தாழ்த்தியும் விற்பனைகள் இடம்பெறுவதாகவும் , பௌர்ணமி தினங்கள் உள்ளிட்ட , மதுவரி திணைக்களத்தால் மதுபானசாலைகளை மூட உத்தரவிடப்படும் நாட்களிலும் மது விற்பனை இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Leave a Reply