யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கடத்தி வந்த நபர் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் இருந்து நபர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் மானின் மண்டையோட்டு பகுதியுடன் மான் கொம்பை கடத்தி வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது மான் கொம்பு மீட்கப்பட்டதுடன் , அதனை கிளிநொச்சி பகுதியில் இருந்து கடத்தி வந்த குற்றச்சாட்டில் 42 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
Leave a Reply