கடலெனத் திரண்ட பெருந்திரளான மக்கள் திரட்சியோடும், நேர்த்தியான ஒழுங்கமைப்போடும், மாபெரும் எழுச்சி நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கனடாவிலும் அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் மே 18, 2024 சனிக்கிழமை மாலை பல்லின மக்களையும் ஈர்க்கும் வண்ணம் வரலாற்றில் பதிவாகியுள்ளது!
இவ்வாண்டு தாயக மக்களின் அடக்குமுறைகளைத் தகர்த்துடைத்த பேரெழுச்சியும், உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சியும், தமிழக மக்களின் உணர்வெழுச்சியும் எம் தமிழினத்தின் ஓயாத ஒன்றுப்பட்ட நீதி வேண்டிப் போராடும் வலிமையான செய்தியை உலகிற்கு ஓங்கி ஒலித்துள்ளது!
இந்த இனம் இனியும் போராடும்!
ஈழம் காணும்வரை ஓயாது எம் போராட்டம்!
Leave a Reply