இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார்.
அதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அத்துடன் மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார்.
அதேவேளை வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply