வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு!

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது பூர்வீக வீட்டிற்கு அருகில், ஆலடிச்சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதன் போது , முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியில்  முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி  இரு மாவீரர்களின் தந்தையான தங்கேஸ்வரனால்  பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.