நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அம்பாறை பெரிய நீலாவணை பாண்டிருப்புப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு பொலிஸார் தடை ஏற்படுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சிகாய்ச்சி பரிமாறப்பட்டு வடக்கு கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
 இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு தடையேற்படுத்தியுள்ளனர்.