அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்தியதமிழின அழிப்புப் போரில், 2009 ஆம்ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலைசெய்யப்பட்ட மக்களைநினைவேந்திடும்,தமிழின அழிப்புநினைவுநாள் – மே18 இன் பதினைந்தாம்ஆண்டு நிறைவில், வையகம் முழுவதும்பரந்துவாழும் தமிழர்கள்உணர்வெழுச்சியோடு நினைவேந்திடதயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம்.
தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும்விடுதலைப்போராட்டமாக எமதுபோராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும்பல இலட்சக்கணக்கான மக்களையும்ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த, தியாகநெருப்பு இன்னும் சுடர்விட்டுக் கனன்றுதேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது.
சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்பஉதவிகளை வழங்கியதன்காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழநடைமுறை அரசின் தேசிய இராணுவம்ஒரு தற்காலிகப் போரியல் பின்னடைவைச்சந்தித்தது. பல நாடுகளின்ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒருபெருஞ்சமரின் பின்னடைவை, ஒரு பாரியவெற்றியாகச் சிங்கள அரசு இறுமாப்புடன்கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின்அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களின்சிந்தனைக் கோட்பாடுதான் என்பதை, சிறிலங்காவின் பேரினவாதஅரசும் அதன் அடிவருடிகளும் கணிக்கத்தவறிவிட்டனர்.
உலகின் அசைவியக்கதில் சுயமாகஉருவாகிய எதனையும் எவரும்அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒருஇனத்தின் விடுதலைக்காக ஆயிரம்ஆண்டுகள் தன்னுள்ளே அடக்கிவைத்திருந்த பேராண்மையை, தமிழன்னைஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின்ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளேஉள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக்கொண்ட தமிழினத்தின் வழிகாட்டியேதமிழீழத் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர்இயல்பாகவே உருவாகியதலைவர், உருவாக்கப்பட்டவர் அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச்சிற்பியும் அவர்தான். இந்த ஒப்புவமையற்றதமிழீழ விடுதலைச் சிந்தனையைஅழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களைவீரச்சாவு எனஅறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக்கோட்பாட்டிற்குச் சாவுமணி அடிக்கவேண்டும். இவ்வறிவிப்பின்ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித்தமிழர்களை வழிநடாத்தும்தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம்இழந்து விட்டது என தமிழ்மக்களின்ஆழ்மனங்களில் பேரிடியாகஇறக்கி, அவர்களின் உளவுரணைச்சிதைத்தழிக்க வேண்டுமென்பதேஎதிரிகளின் திட்டமாகும்.
இவையெல்லாம் சரிவரநடந்தேறினால், தேசியத்தலைவரின்சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின்உயிர்விதைகளால்அத்திவாரமிட்டு, மக்களின்அர்ப்பணிப்புக்களால் உறுதியாகக்கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைப்போராட்டம், தன்னைத்தானேஅழித்துவிடும் என எதிரிகள்கனவுகாண்கின்றனர். இதுதான்> எமதுஎதிரியான சிங்களப் பேரினவாதத்தின்தெளிவான நிகழ்ச்சிநிரலாகும்.
தமிழீழக் கோட்பாட்டைஅழிக்கவல்ல, நுணுக்கமானஇப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றியவல்லாண்மை வாதமும்தென்கிழக்காசியாவைத் தங்களுடையபூகோள, வர்த்தக நலன்களிற்காகப்பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்கநாடுகளின் ஏகாதிபத்திய வாதமும்இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.
இது இவ்வாறிருக்க, தமிழீழவிடுதலைப்போராட்டத்தின்இயங்குவிசையையும் தளத்தையும்செல்நெறியையும் மடைமாற்றம்செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்பஅங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்விதுவாரகா,அரசியல் தலைமைத்துவத்தைஏற்றுச் சனநாயக ரீதியில் போராட்டத்தைக்கொண்டு நடாத்தப் போகிறார் எனவும்சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சிலநடவடிக்கைகள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதிதிரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின் அரசியல்கட்டுக்கதைகளைமுத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர்ஒருங்கிணைப்புக் குழு (WTCC) என்னும்புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்ற காகிதநடவடிக்கை அமைப்பொன்று,மக்கள்மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும்வகையில்,மட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடகவெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப்பாரம்பரியங்களையும்கட்டுக்கோப்புகளையும் சிதைத்து,தமிழீழவிடுதலைக்கோட்பாட்டைஅழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பைஇல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்துவருகின்றார்கள்.
அன்பார்ந்த மக்களே!
ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின்புதல்வியின் வருகை என்னும்தமிழீழவிடுதலைப் போராட்டமரபுகளைத்தாண்டிய தமிழீழக்கோட்பாட்டுச் சிதைப்புநடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும்சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களைவீரச்சாவு என்னும் சொல்லாடலினுள்அடக்கி,விளக்கேற்றுதல் என்னும்நடவடிக்கை. இவ்விரண்டுநடவடிக்கைகளும் தமிழீழக் கோட்பாடுஎன்னும் தேசியத்தலைவரின் சிந்தனைமூலோபாயத்தைஅழிப்பதற்காக, எதிரிகளினால்திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின்அடிப்படையில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப்போகும் பின்னடைவுகளைவிளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால் உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச்செயற்பாட்டாளர்கள்மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக்கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின்சிந்தனையானது இதிலிருந்து அவர்களைமீட்கும் எனத் திடமாக நம்புகிறோம்.
பேரன்புமிக்க எமது மக்களே !
காலத்திற்குக் காலம் எதிரிகளால்திட்டமிட்டு உருவாக்கப்படும்பொய்ப்பரப்புரைகளை நாம்கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறான உண்மைக்குப்புறப்பான கதையாடல்களைப்புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள்சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன்இருக்குமாறு அன்புரிமையுடன்வேண்டிக்கொள்கின்றோம்.
காலநதியில் கரைந்து போகாத எமதுவிடுதலைப் பயணங்கள்,தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் என்னும்பேராளுமையின் சிந்தனையின்வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிக்கும். அது,எந்நிலையிலும் எதிரிகளின்சதிவலைப்பின்னல்களில்அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தைஅழிப்பதற்கான எதிரிகளின் சிந்தனைக்குச்செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள்காட்டிய வழித்தடத்தில், தமிழீழத்தேசியத்தலைவரின் ஒளிரும் சிந்தனைப்பாதையில் உறுதியுடன் வழிநடந்து, தமிழீழவிடுதலை நோக்கித் தொடர்ந்தும்போராடுவோமென உறுதியெடுத்துக்கொள்வோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.
Leave a Reply