கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு!

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு அதிகரித்துள்ளது.Rentals.ca மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை 1915 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 11.6 வீதமாக வாடகைத் தொகை அதிகரித்துள்ளது.

இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 22 95 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த தொகையானது கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 11 வீதமாக அதிகரித்துள்ளது.