வணக்கம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவைக்குத்தேர்வு செய்யப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர்களை இவ்அறிக்கையூடாக மக்களுக்கு அறியத் தருவதில் தலைமைத்தேர்தல் ஆணையாளர் எனும் வகையில் நான்மனநிறைவடைகிறேன். இவ் விபரங்கள் அந்தந்த நாடுகளில்அமைக்கப்பட்டிருந்த தேர்தல் ஆணையகங்களால் எனக்குஅறியத் தரப்பட்டவையாகும்.
நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் விபரம்:
ஆஸ்திரேலியா
நெதர்லாந்து (Benelux)
கனடா
1. Jacob Arulrajah
2. Yogendran Vaiseegamagapathy
3. Mariajerom Mariyanayagam
4. Jeyathasan Kurukularajah
5. Reginald Nagarajah
6. Shweta Uthayakumar
7. Kalaichelvi Sivasubramaniam
8. Joseph P Antony
9. Cynthia Sri Pragash
10. Shanthini Sivaraman
11. Sudesh Suren Mahendran
12. Wasanthaa Rohini Devi Karuppiah
13. Gopalakrishnan Arumugam
14. Navaneshan Murugandy
15. Sivani Ramesh
16. Vijitharan Varatharajah
17. Kumuthini Kunaratnam
18. Thaninayagam Shanmuganathan
19. Jeyameera Karthick
20. Ravichandran Mathy Mahalingam
21. Kandasamy Sooriyakumaran
22. Gupenthiran Mahalingam
டென்மார்க்
பிரான்ஸ்
ஜெர்மனி
இத்தாலி
நியூசிலாந்து
நோர்வே
1. Thevakumar Sinnathurai
2. Ronikerts John
சுவிட்சர்லாந்து
ஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
இத் தேர்தல் நடைமுறையின்போது கனடா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளில் சிலரது தேர்தல் வேட்புமனுக்கள் இந்நாடுகளின் தேர்தல் ஆணையகங்களால் நிராகரிக்கப்பட்டமைதொடர்பான முறைப்பாடுகள் எனக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன. இவற்றுள் கூடுதலான வேட்புமனுக்கள்நிராகரிக்பட்டிருந்த கனடா நாட்டில் இந்த முறைப்பாடுகளைஆய்வு செய்வதற்காக மூவர் கொண்ட குழுவொன்று என்னால்நியமிக்கப்பட்டது. பரிந்துரைக்கும் அதிகாரத்தைக்கொண்டிருந்த இவ் ஆய்வுப்குழுவின் பரிந்துரையுடன் கனடாதேர்தல் ஆணையம் உடன்படாமையால் அங்கு எழுந்தபிணக்குக்கு என்னால் உடனடியாகத் தீர்வு காண முடியவில்லை. இந் நிலையில் கனடா தேர்தல் ஆணையகத்தால் எனக்குஅறிவிக்கப்பட பெயர் விபரங்களையே நான் இவ் அறிக்கையில்இணைத்துள்ளேன்.
தேர்தல் மூலம் அரசவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும்நடைமுறையின்போது ஏற்படும் பிணக்குகளை நாம் இயன்றவரைசுமூகமாகத் தீரத்துக் கொள்ளல் நன்று. நாம் தீர்வைக் காணும்நடைமுறை மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும்.இப் பிணக்குகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலக்குநோக்கிய பயணத்துக்கு இடையூறாகவும் அமைந்துவிடக்கூடாது. ஜனநாயக நடைமுறையில் செயற்படுபவர்களுக்குமிகுந்த சகிப்புத்தன்மை இருக்க வேண்டியதும்அவசியமானதாகும்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பைத் தமிழ் மக்கள்நினைவுகூரும் காலப்பகுதியில் தனது புதிய அரசவைஅமர்வுகளை ஆரம்பிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்மரபிற்கு துணைநிற்கும் வகையில் உறுப்பினர்கள் விபரம்அறிவிக்கப்பட்டுள்ளது. இக் காலம் சார்ந்த அவசியத்தால் தேர்தல்முறைப்பாடுகள் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கப்போதிய கால அவகாசம் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை. .
தேர்தல் குறித்து எழுந்த முறைப்பாடுகளையும், தீர்க்கப்படாதபிணக்குகளையும் கையாள நிறைவேற்று அதிகாரம் கொண்ட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து, அதனூடாக முறைப்பாடுகளைஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை காலதாமதமின்றி எடுக்குமாறு 4 வது அரசவைக்குத் தேர்வு செய்யப்படப்போகும்பிரதமருக்குப் பரிந்துரை செய்கிறேன்.
இத் தேர்தல் நடைமுறையின்போது என்னோடு இணைந்துஉழைத்த அனைவருக்கும் நன்றியினையும் பாராட்டுகளையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
ரஞ்சன் மனோரஞ்சன்
தலைமை தேர்தல் ஆணையாளர்
Leave a Reply