ஒரே நாளில் பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட  பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஒரே நாளில் குறித்த குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று (08.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் குழுக்களோடு தொடர்புகளைப் பேணினர் என்று கூறப்படும் மேலும் 16 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கைது செய்யப்பட்டுள்ள 11 பேரில் மேல் மாகாணத்தின் (Western Province) தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முல்லேரியா, மல்வானை ,கடுவலை மற்றும் உடுகம்பொல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 57, 39, 25, 23 மற்றும் 35 வயதுடைய ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.