வவுனியாவில் (Vavuniya) 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (07.05.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, செக்கட்டிப்புலவு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave a Reply