மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக மீளும் செயற்பாடு, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஸ்தம்பிதமடைந்துவிடக்கூடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மீட்புப் பொதியால் தூண்டப்பட்ட கடுமையான சீர்திருத்தங்கள் காரணமாக, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.
எனினும் நாடு முற்றிலும் ஆபத்தில் இருந்து வெளியேறவில்லை என்று நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.
இந்தநிலையில், உள்நாட்டில், நிர்வாகத்தின் மாற்றத்துக்கு மத்தியிலும், தற்போதைய கொள்கைகளை முன்னோக்கிச் கொண்டு செல்வது முக்கியமானது.
Leave a Reply