வீசா அனுமதி கட்டணத்தில் மாற்றமில்லை : அமைச்சரவை தீர்மானம்

வெளிநாட்டவர்களிடம் அறவிடப்பட்ட 30 நாட்கள் வீசா அனுமதிக்கான 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (06.05.2024) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.