மட்டக்களப்பில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு

மட்டக்களப்பில் (Batticaloa) சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரே இன்று (06) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வரவழகை்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (03) பாடசாலை முடிந்து பிறபகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்தபோது அங்கு இளைஞன் ஒருவர் வந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோரதும் சிறுமியினதும் பெயரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும் உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான் அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஏனைய பிள்ளைகள் அவதானம்” என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.