யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது!

யாழ்.வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று (02.05.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட (சுருக்குவலை) வலையை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமையினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.