வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

தனியார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனியார் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.