நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் , நேற்றையதினம்(25) நடைபெற்றது.
அதன் போது , நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மன்றில் தோன்றி சாட்சியமளித்தார்.
அதன் போது, உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்ட போது , “ஆம்” என பதிலளித்துள்ளார்.
ஆனால் குறித்த துப்பாக்கியை சாட்சி அடையாளம் காட்ட துப்பாக்கி மன்றில் இருந்திருக்கவில்லை. கைத்துப்பாக்கியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில் , அது மீள பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.
Leave a Reply