வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1000 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா போன்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply