வெடுக்குநாறி மலை விவகாரம்: பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்களத்திடம் விசாரணை!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிஸார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா, உள்வட்ட வீதியில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு இன்று (24.04.2024) அழைக்கப்பட்ட நெடுங்கேணிப் பொலிஸார் , வனவளத் திணைக்களத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *