கனடாவில் வீட்டு வாடகை குறித்து வெளியான தகவல்!

கனடாவில் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கும் பிரதான நகரங்களில் ஒன்றான ரொறன்ரோவில்(toronto) வாடகை குடியிருப்பாளர்களுக்கு  வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளதோடு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.