வெளிநாட்டு பெண் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது!

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை  நுவரெலியா – டொபாஸ் பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் நுவரெலியா (Nuwara Eliya) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.