பொத்துவில் கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்!

அம்பாறை(Ampara) பொத்துவில் பகுதியில் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இன்று(20.04.2024) இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த சிறுவன் கடலில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.