கனடாவின் (Canada) டொராண்டோ (Toronto) பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணய கொள்ளையுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற கொள்ளையுடன் தமிழர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் (canada) பிரம்டனை சேர்ந்த 25 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை கடத்தியமை, கொள்ளைச் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவியமை, பங்களிப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரசாத் பரமலிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ளது.
65 ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரசாத் பரமரலிங்கம் நிதி உதவி வழங்கியதாக அமெரிக்க பொலிஸார் (American Police) சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Leave a Reply