கனடாவில் அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் ஐயாயிரம் அரசாங்க ஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஆட்குறைப்பு குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரும், பிரதிப் பிரதமருமான கிறிஸ்டியா ப்ரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகல்கள் மற்றும் ஓய்வு பெறுதல்கள் போன்ற சந்தர்ப்பங்களில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யாது ஆளணி வள எண்ணிக்கையை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Leave a Reply