மாத்தளையில் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டு பெண் ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.கந்தேநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுனுகல பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பெண்ணின் சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply